Friday, September 23, 2005

யாழ் சுதாகர்..சில குறிப்புகள்

யாழ் சுதாகர், சென்னை, சந்தமாமா கட்டிடத்தில் வெளியான பிரபல பெண்கள்

மாத இதழான 'மங்கை' பத்திரிகையில்..தொடர்ந்து 6 ஆண்டுகள் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். [1993 முதல் 1998 வரை] - - - அதற்கு முன்பு, சென்னையில் 'தேவி', 'சாவி'ஆகிய பத்திரிகைகளில் நிருபராகவும்....'பொம்மை' சினிமாப் பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். - - - 'பொம்மை' பத்திரிகையில்...வாசகர்களின் கேள்விகளுக்கு 'பட்டி பதில்கள்' பகுதியில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் பதில் அளித்திருக்கிறார். - - - மதுரை,'கவியரசு கண்ணதாசன் கவிப் பணி மன்றம் 'நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். [1984] - - - இவரது முதல் கவிதைத் தொகுப்பான 'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' 1986 இல் வெளியானது. - - - இவரை சென்னையில் அறிவிப்பாளராக இசையமைப்பாளர் உதயாவும், 'நேயம்' வீர பாண்டியனும் அறிமுகப்படுத்தினார்கள்.[1994] லண்டன் ஐ.பி.சியில் இவர் நிகழ்ச்சிகளுக்கு...திரு.ஏ.சீ.தாசீசியஸ் அவர்கள் நல்ல ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தினார். [ 1997- 1998] ஆஸ்திரேலியாவில்,'இன்பத்தமிழ் ஒலி' வானொலியிலும், கனடாவில் ஐ.ரி.பி.சியிலும் யாழ் சுதாகரின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி உள்ளன. - - - தற்போது இவர் சென்னை 'சூரியன் F.M' இல் இரவு நேர அறிவிப்பாளராகப் பணியாற்றுகிறார். - - - இணையத்தில்...'ரசிகன்' என்ற பத்திரிகையில் வாசகர்களின் கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்களை.... மணிமேகலைப் பிரசுரம் நூலாக வெளியிட்டுள்ளது. ['புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ் சுதாகர் பதில்கள்'] - - - 'மாநகரக் காதல்' என்ற படத்திற்காக இவர் எழுதிய பாடல்களை...உதயாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,ஜெயச்சந்திரன், சித்ரா,மனோ...ஆகியோர் பாடியுள்ளனர்.[1991] - - - ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர். - - - யாழ் சுதாகர்....நெல்லியடி அரசடி பள்ளிக் கூடம்,யாழ் இந்துக் கல்லூரி, யாழ் பல்கலைக் கழக...மாணவர் ஆவார். - - - பருத்தித் துறை 'லிவர்பூல்',யாழ்ப்பாணம் 'பொண்ட்' மற்றும் 'நொதேர்ன்' கல்வி நிலயங்களில் லொஜிக் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார் யாழ் சுதாகர். - - - யாழ் சுதாகரின் கதை,கவிதைகள் சென்னையில் கணையாழி,தேவி,சாவி,தீபம்,மங்கை ஆகிய பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. கமல்ஹாசன், சிவகுமார்,விஜய காந்த், சௌகார் ஜானகி, ராதிகா,பாலு மகேந்திரா, சத்ய ராஜ்,பிரபு,டி.எம்.சௌந்தரராஜன்,பி.பி.சீனிவாஸ் உட்பட நூற்றுக்கணக்கான திரைக் கலைஞர்களை இவர் பேட்டி கண்டு.....பேசும் படம்,பொம்மை, சினிமா எக்ஸ்பிரஸ்,வண்ணத் திரை ஆகிய பத்திரிகைகளில் எழுதியுள்ளார். - - - - சரித்திரத்தில்...யாழ் சுதாகர்..... 1.இந்தியாவில் வர்த்தக ரீதியான ஒரு சஞ்சிகையில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய முதல் இலங்கைத் தமிழர் இவர் தான். ['மங்கை'சஞ்சிகையில் 6 ஆண்டுகள் பொறுப்பாசிரியர்.] 2.இந்தியாவில்..முழு நேர வானொலி அறிவிப்பாளராகக் கடமையாற்றிய...கடமையாற்றிக் கொண்டிருக்கும் முதல் இலங்கைத் தமிழர் இவர் தான். இந்தியாவில்..முழு நேர வானொலி அறிவிப்பாளராகக் கடமையாற்றிய...கடமையாற்றிக் கொண்டிருக்கும் 'ஒரே இலங்கைத் தமிழரும்'... இவர் தான். 3.முதல் முதலாக இணையத் தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் தந்த பெருமையும் இவரைச் சேரும். 4. தமிழ் நூல் வரலாற்றில்... இணையத் தளத்தில் வந்த கேள்வி பதில்களைத் தாங்கி வரும் முதல் நூல் இவருடையது. ['புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ் சுதாகர் பதில்கள்' - மணி மேகலைப் பிரசுர வெளியீடு] 'யாழ் சுதாகர் பதில்கள்' நூலின் இரண்டாம் பாகம்.... விரைவில் வெளி வரவுள்ளது. யாழ் சுதாகரின் மின் அஞ்சல் - rasigantamiloldsongs@gmail.com

யாழின் 'பேசும் குழல்'- 9840419112 [phone)